Odisha Train Accident: ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி, விபத்துக்குள்ளானதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று மாலை 6.50 மணி முதல் இரவு 7.10 மணிக்குள் நிகழ்ந்த இந்த விபத்தின் சில காட்சிகள்
கோரமண்டல் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயில், நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதியதால் தடம் புரண்டது. தொடர்ந்து, மற்றொரு ரயிலான யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட், கோரமண்டல் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதில் நிலைமை மேலும் மோசமடைந்தது.
சரக்கு ரயிலில் மோதியதால் தடம் புரண்ட கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் சரிந்து மோசமாக விபத்துக்குள்ளானது. ஒரு பெட்டி மற்றொரு ரயிலின் கூரையின் மீது ஏறியுள்ளது.
சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் என மொத்தம் இரண்டு ரயில்களின் 17 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன
சில நிமிடங்களில் அந்த வழியே சென்றுக் கொண்டிருந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட் ர்யில், கோரமண்டல் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தைச் சுற்றியுள்ள பல கேள்விகள் வட்டமிடுகின்றன
இரண்டு ரயில் விபத்து நடைபெற்றது எப்படி?
ஒரே இடத்தில் மூன்று ரயில்கள் வந்தது எப்படி?
இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதப் பிழையா?
ஒடிசா அரசு 06782-262286 என்ற ஹெல்ப்லைனை வெளியிட்டுள்ளது. ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை).