உ.பி-ல் 2 குழந்தைக்கு தாய் ஆனா பெண் பாலியல் வன்கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஃகொண்டாவில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தனக்கு நியாயம் கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ஃகொண்டா மாவட்டம் கெர்னல்கஞ்ச் என்ற ஊரைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்கு தாயான அப்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சங்கர் தயாள், அசோக் குமார் என்ற இரண்டு கொடூரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆழக்கபட்டுள்ளார்.


இதை அவர்கள் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சங்கர் தயாளையும், அசோக் குமாரையும் விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.


இதனால் விரக்தி அடைந்த அந்தப் பெண் தனது வீட்டில் உள்ள கூரையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதி காவல்துறையினர் இது கூர்த்து மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


"பொலிஸ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சுத்தமான சிட்டை கொடுத்தபோது அவர் மிகவும் கவலையடைந்தார், அதனால் தற்கொலை செய்து கொண்டார்," என்று அவர் கூறினார். குற்றச்சாட்டுக்கு பிறகு, ஐ.டி.சி.யின் 376D (கும்பல் கற்பழிப்பு) மற்றும் ஐபிசி 506 (குற்றவியல் அச்சுறுத்தல்) ஆகியவற்றின் கீழ், ஆகஸ்ட் மாதத்தில் போலீசார் ஒரு புகாரை பதிவு செய்தனர்.