மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மேலும் 15 நாட்களுக்கு (ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை) ஊரடங்கை நீட்டிக்க மணிப்பூர் அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களிடையே வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் மாநிலத்தில் COVID-19 ஊரடங்கை நீட்டிப்பதாக மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.


READ | கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா...


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தங்கள் மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதாக சில மாநிலங்கள் முடிவு செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது. கடந்த வாரம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் மாநில அளவிலான ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் தற்போது மணிப்பூர் அரசாங்கம் ஜூலை 15 வரை ஊரடங்களை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.



மணிப்பூரை பொருத்தவரையில் மொத்தம் 1092 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 442 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணம்பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், 660 பேர் கொரோனா வைரஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு புறம் மாநிலத்தில் கொரோனா இறப்புகள் இதுவரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த ஜூன் 14 துவங்கி மாநிலத்தில் தொடர்சியாக 50-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் தினசரி கண்டறியப்பட்ட நிலையில், மாநில அரசு தற்போது இந்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.


READ | சலூன் கடைகள் செயல்பட அனுமதி... இயல்பு நிலைக்கு திரும்புகிறதா மும்பை?


என்றபோதிலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு முதலமைச்சர், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளை முறையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் தொடர்வதற்கு அனுமதித்துள்ளார். எனினும் அடுத்த 15 நாட்களில் வேறு எந்த பொது போக்குவரத்தும் மாநிலத்தில் இயக்க அனுமதிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.