கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக அறியப்பட்ட நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் இரண்டாவது தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்மணி 39 வயதானவர் எனவும், அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள அமைச்சர் பிரிவில் பணிபுரிந்து வந்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் குறித்த பெண்மனிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் கிருமி நீக்கத்திற்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
READ | கோயம்புத்தூரில் வீட்டிற்குள் 35 குட்டிகளை போட்ட கண்ணாடிவிரியன் பாம்பு...
பாதிக்கப்பட்ட பெண்மனி தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூரில் தங்கியிருந்ததாகவும், சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி-க்கு விஜயம் செய்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் அவர் மாவட்டத்திற்கு நுழைகையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் தற்போது அவரது அனைத்து தொடர்புகளும், சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், பெண்ணின் சகாக்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, அவர்களின் உடல்நிலையை சரிபார்த்து பின்னர் பணியை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்துவதில் கோயம்பத்தூர் மாவட்ட நிர்வாக நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.
READ | உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்... கௌசல்யாவின் தந்தை விடுதலை!...
கோயம்புத்தூரில் அதிகாரிகளுடனான மறுஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் தொற்றுநோய் நிலைமை மிதமான நிலையில் இருப்பதாகவும், சென்னைக்குப் பிறகு மிகவும் தொழில்மயமாக்கப்பட்ட மாவட்டத்தில் தொற்றுகள் குறைவாக இருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.