புதுடெல்லி: வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் இது.'விவாத் சே விஸ்வாஸ்' ('Vivad Se Vishwas') திட்டத்தின் கீழ், சர்ச்சைக்குரிய வரி, சர்ச்சைக்குரிய வட்டி, சர்ச்சைக்குரிய அபராதம் அல்லது சர்ச்சைக்குரிய கட்டணங்களுக்கு தீர்வு காண்பதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி, நேரடி வரி தகராறு தீர்க்கும் திட்டமான'Vivad Se Vishwas' என்பதன்கீழ் வருமான வரி (Income tax) கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்கள் வரி நிலுவை விவரங்கள் மற்றும் செலுத்த வேண்டிய தொகை ஆகியவற்றைக் வரி அதிகாரிகள் சான்றிதழை வழங்கும் வரை திருத்திக் கொள்ளலாம் என்று வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.


வருமான வரி தீர்வு ஆணையத்திடம் (Income Tax Settlement Commission) நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் அல்லது கணக்கு மூலம் ரிட் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்குகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று மத்திய நேரடி வரி வாரியமும் (Central Board of Direct Taxes) தெரிவித்துள்ளது.


பரஸ்பர ஒப்பந்த நடைமுறை (Mutual Agreement Procedure) தீர்மானம் நிலுவையில் உள்ள நிலையில் அல்லது மதிப்பீட்டாளர் Mutual Agreement Procedure-இன்முடிவை ஏற்கவில்லை எனில், தொடர்புடைய முறையீடு இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் வரும் தகுதியைப் பெறும் என்றும் சிபிடிடி தெளிவுபடுத்தியது. "இதுபோன்ற சந்தர்ப்பத்தில், அறிவிப்பாளர் MAP விண்ணப்பம் மற்றும் மேல்முறையீடு இரண்டையும் திரும்பப் பெற வேண்டும்" என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  


அட்வான்ஸ் ரூலிங் ஆணையம் (AAR) வரி செலுத்துவோருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த வழக்குகளில் வரி (TAX)செலுத்துவோர் அறிவிப்புகளை பெறுவதற்கு தகுதியுடையவர் என்றும் வருமானவரித் துறை தெளிவுபடுத்தியுள்ளது.  


Also Read | Honda City மற்றும் Swift Dzire கார்களை குறைவான விலையில் வாங்குவது எப்படி?


"வருமானம் அளவிடக்கூடியது என்பதால் வரி செலுத்துவோர் தகுதியுடையவர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில், வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இந்த பிரச்சனையில் முடிவு இருந்தால், சர்ச்சைக்குரிய வரியில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்" என்று சிபிடிடி கூறியது. 


நேரடி வரி தகராறு தீர்வுத் திட்டமான 'Vivad Se Vishwas' இன் கீழ் 2021 மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு மூன்று மாதங்களுக்குள் பணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை மூன்றாவது முறையாக அரசாங்கம் நீட்டித்திருந்தது. இருப்பினும், 2020 டிசம்பர் 31 க்குள் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G