வருமான வரி விகிதம்: புத்தாண்டு தொடங்கிவிட்டது. புத்தாண்டில் வழக்கத்தை போலவே சில விதிகளில் மாற்றம் ஏற்படும். இதனுடன் பிப்ரவரி மாத தொடக்கத்தில் மத்திய அரசு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இன்னும் சில வாரங்களில் நாட்டிற்கான பட்ஜெட் 2023-24-ஐ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இதற்கிடையில் தான் அளித்த பல வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட 2022-23 பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருமான வரி


தற்போது 2022-23 பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 'தன்னிறைவு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கும் வகையில், கூட்டுறவு நிறுவனங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி குறைக்கப்பட்டு, 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர கூடுதல் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் 12% இல் இருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | இலவச ரேஷன் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் இலவசம்! 



மத்திய பட்ஜெட்


கூட்டுறவு சங்கங்களுக்கு வருமான வரித்துறை செய்த சீர்திருத்தங்களால் பலர் பயனடைந்துள்ளனர். நிறுவனங்களுக்கு இணையாக கூட்டுறவு நிறுவனங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், கூட்டுறவுச் சங்கங்களுக்கு வருமான வரித் துறை மூலம் செய்யப்பட்ட சீர்திருத்தத்தில், 1 கோடி ரூபாய்க்கு மேல், 10 கோடி ரூபாய்க்குக் குறைவான வருமானம் உள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான கூடுதல் கட்டணத்தை 12% லிருந்து 7% ஆகக் குறைப்பதும் அடங்கும்.


வருமான வரித்துறை


இதனுடன், பெற்றோர்/பாதுகாவலர் என இவர்களை சார்ந்திருக்கும் ஊனமுற்றவர்களுக்கு ஆண்டுத் தொகை மற்றும் மொத்தத் தொகை செலுத்தப்படும்போது விலக்கு அளிக்கும் வகையில் பிரிவு 80DD திருத்தப்பட்டுள்ளது. இதனுடன், கூடுதல் கட்டணம்/செஸ் பற்றிய விளக்கத்தை அளித்து, வரிக்கு உட்பட்ட வருமானத்தை கணக்கிடுவதில் கூடுதல் கட்டணம்/செஸ் விலக்கு ஏற்கப்படாது என்று கூறப்பட்டது. அதன்படி, வரி செலுத்துவோர் முந்தைய ஆண்டு வருமானத்தை மறுகணிப்பிற்கு விண்ணப்பிக்க உரிய படிவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | Income Tax: புத்தாண்டில் ஒரு மாஸ் செய்தி, இந்த வருவாய்க்கு வரி செலுத்த வேண்டாம், தெரியுமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ