6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் இஸ்ரேல் அதிபர் ரூவென் ரிவ்லின். அவர் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்பொழுது  சூரிய சக்தி தொடர்பாகவும் இஸ்ரேல் - இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகின. நீர்மேலாண்மை தொடர்பாக இஸ்ரேல் - இந்தியா தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட்டது. பிறகு இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியபின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர்கள் கூறியதாவது:-


மோடி பேசியது:- பயங்கரவாதம் உலகிற்கே சவாலாக உள்ளது. இதற்கு எல்லை கிடையாது. இரு நாடுகளின் மக்களும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை எதிர்கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த பிராந்தியத்தில், நாடு ஒன்று தனது அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டி வருகிறது. பயங்கரவாதத்தை தூண்டுபவர்களுக்கு எதிராகவும், ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை சர்வதேச அமைப்புகள் எடுக்க வேண்டும். மவுனமாக இருப்பதும், பேசாமல் இருப்பதும், பயங்கரவாதத்தை தூண்டவே செய்யும் என்றார்.


இஸ்ரேல் அதிபர் பேசியது:- மக்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாக்க இரு நாடுகளும் எப்பொழுதும் தயாராக உள்ளது. இந்தியாவின் மேக் இன் இந்தியா மற்றும் மேட் இன் இந்தியா திட்டத்திற்கு இஸ்ரேல் ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்தார்.