மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh) இன்று நாடாளுமன்றத்தில் இந்திய சீன எல்லையில் (India China Border)  உள்ள பதற்ற நிலை தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லடாக் (Ladakh) நிலைமை குறித்து எடுத்துரைக்க  அவைக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்லை கோடு தொடர்பாக  இரு நாடுகளுக்கும் வெவ்வேறு நிலை இருப்பதாக சீனா நம்புகிறது என்று அவர் கூறினார். 1950-60 களில் இரு நாடுகளும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. எல்லையில் ஏற்படும் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க இந்தியா முழுமையாக தயாராக உள்ளது என்று ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இருந்து சீனாவை எச்சரித்தார்.


பல காலமாக சுமார் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறது.  1963 ஆம் ஆண்டு சீன-பாகிஸ்தான் (China vs Pakistan) 'எல்லை ஒப்பந்தம்' என்று பெயரில், பாகிஸ்தான் சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5,180 சதுர கி.மீ. பரப்பளவை சீனாவிடம் (China) ஒப்படைத்தது. என்று அவர் மேலும் கூறினார்.


ALSO READ | இந்திய வீரர்களை கண்டு அஞ்சி நடுங்கும் சீனாவின் ”சாக்லேட் வீரர்கள்”... காரணம் என்ன..!!!


இந்தியா சீனாவிற்கும் இடையில், இது ஒரு பெரிய பிரச்சினை என்றும் அதற்கான தீர்வு அமைதியாகவும் உரையாடல் மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்றார். எல்லையில் அமைதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம். எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் வெவ்வேறு விளக்கங்கள் உள்ளன என்று ராஜ்நாத் சிங் (Rajnath singh) கூறினார். அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன. சீனாவின் எல்லைப் பிரச்சினை ஒரு சிக்கலான பிரச்சினை என்றும் அதன் தீர்வு அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். எல்லையில் அமைதி நிலவுவது முக்கியமானது என்று இரு நாடுகளும் நம்புகின்றன.


ஏப்ரல் முதல் லடாக் எல்லையில் சீன துருப்புக்கள் மற்றும் அவர்கள் ஆயுதங்களின் அதிகரித்துள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். கல்வான் பள்ளத்தாக்கு (Galwan Valley) பிராந்தியத்தில் சீனா, எல்லை மீறி நடந்து கொண்டதால் மோதல் வெடித்தது என்றும், நமது துணிச்சலான வீரர்கள் சீன இராணுவத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, எல்லையையும் பாதுகாத்துள்ளனர் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். 


நமது வீரர்கள் வீரம் தேவைப்படும் இடத்தில் வீரம் காட்ட தயங்குவதில்லை, அமைதி தேவைப்படும் இடத்தில் அமைதி காப்பத்திலும் சிறந்தவர்கள் என ராஜ்நாத் சிங் கூறினார்.


ALSO READ | சீனாவை வீழ்த்தி UN ECOSOC பெண்கள் ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR