சீனாவை வீழ்த்தி UN ECOSOC பெண்கள் ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா!!

பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு அமைப்பான ஐக்கிய நாடுகளின் பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தனக்கென ஒரு இடத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி திங்கள்கிழமை தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 15, 2020, 11:16 AM IST
  • பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு கிடைத்துள்ள ஒப்புதல்.
  • பெண்களளுக்கான ஆணையத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேர்தல்களில் போட்டியிட்டன.
  • இந்தியா இந்த ஆணையத்தில் தனக்கென ஒரு இடத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சீனாவை வீழ்த்தி UN ECOSOC பெண்கள் ஆணையத்தில் உறுப்பினரானது இந்தியா!! title=

வாஷிங்டன்: பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் (ECOSOC) ஒரு அமைப்பான ஐக்கிய நாடுகளின் (United Nations) பெண்கள் நிலைமை ஆணையத்தின் உறுப்பினராக இந்தியா தனக்கென ஒரு இடத்தை தற்போது தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி திங்கள்கிழமை (செப்டம்பர் 15) தெரிவித்தார்.

ட்விட்டரில் இது குறித்து எழுதிய திருமூர்த்தி, "இந்தியா மதிப்புமிக்க ECOSOC அமைப்பில் இடம் பெறுகிறது! இந்தியா, பெண்கள் நிலைமை ஆணையத்தின் (CSW) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இது பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நமது நாட்டின் உறுதிப்பாட்டிற்கு கிடைத்துள்ள ஒப்புதலாகும். உறுப்பு நாடுகளின் ஆதரவுக்கு நன்றி.” என்று எழுதியுள்ளார்.

ALSO READ: இந்திய வீரர்களை கண்டு அஞ்சி நடுங்கும் சீனாவின் ”சாக்லேட் வீரர்கள்”... காரணம் என்ன..!!!

பெண்களளுக்கான இந்த ஆணையத்தில் ஒரு இடத்தைப் பிடிக்க, இந்தியா (India), ஆப்கானிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேர்தல்களில் போட்டியிட்டன. 54 உறுப்பினர்களிடையே இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் (Afghanistan) வாக்குகளை வென்றாலும், சீனாவால் பாதி அளவைக் கூட தாண்ட முடியவில்லை.

2021 முதல் 2025 வரை ஐக்கிய நாடுகளின் பெண்களின் நிலைமை ஆணையத்தில் இந்தியா உறுப்பினராக இருக்கும். முன்னதாக ஜூன் 18 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (UNSC), மொத்தமிருந்த 192 வாக்குகளில் 184 வாக்குகளைப் பெற்று நிரந்தரமற்ற உறுப்பினர்களில் ஒன்றாக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியா ஐ.நா-வின் இந்த பாதுகாப்பு சபையில் எந்த வகையிலும் உறுப்பினர் ஆவதை சீனா (China) தன்னால் ஆன வரை தடுத்துப் பார்த்தது. எனினும், இனியும் சர்வதேச தளங்களில் சீனாவை நம்ப ஆள் இல்லை என்பது இதுபோன்ற பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டு விட்டது. 

ALSO READ: கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!

Trending News