புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இப்போது மெதுவாக கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் தொற்று எண்ணிக்கையில் நிலையான சரிவு காணப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனா காரணமாக ஏற்படும் இறப்புகளும் கட்டுக்குள் வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் 1.26 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 2782 நோயாளிகள் இறந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 1,26,698 பேர் புதிதாக பாதிப்பு உலக அளவீட்டின்படி, கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 1 லட்சம் 26 ஆயிரம் 698 பேர் கொரோனா வைரஸால் (Coronavirus)  பாதிக்கப்பட்டுள்ளனர். 2,782 பேர் உயிர் இழந்தனர். இதற்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 கோடி 81 லட்சம் 73 ஆயிரம் 655 ஆகவும், தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் 31 ஆயிரம் 909 ஆகவும் உள்ளது. 


இந்தியாவில் 36 நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் ஏற்பட்ட மிகக் குறைந்த இறப்புகள் 


கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலையில் 36 நாட்களுக்குப் பிறகு, நாட்டில் மிகக் குறைந்த அளவில் இறப்புகள் பதிவாகியுள்ளன. முன்னதாக ஏப்ரல் 26 அன்று 2764 பேர் உயிர் இழந்தனர். இரண்டாவது அலையில் (Second Wave) அதிக இறப்பு எண்ணிக்கை மே 19 அன்று பதிவு செய்யப்பட்டது. அன்று ஒரு நாளில் 4529 நோயாளிகள் இறந்தனர். மே 7 ஆம் தேதி, நாடு முழுவதும் ஒற்றை நாள் தொற்றின் அளவு மிக அதிகமாக பதிவு செய்யப்பட்டது. அன்று ஒரே நாளில் 4 லட்சம் 14 ஆயிரம் 188 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 


ALSO READ: COVISHIELD ஒரு டோஸ் போதுமா; ஆய்வுகள் அடிப்படையில் விரைவில் முடிவு?


தொடர்ச்சியாக 19 வது நாளாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகம் 


தரவுகளின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2.54 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து 19 வது நாளாக, கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்குப் பிறகு, இந்தியாவில் கோவிட் -19 ல் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 கோடி 59 லட்சம் 39 ஆயிரம் 504 ஆக உயர்ந்துள்ளது. இதனுடன், நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது 19 லட்சம் 2 ஆயிரம் 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கொரோனா தொற்றின் மீட்பு விகிதம் 91 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது


இந்தியாவில் கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்றின் மீட்பு விகிதம் 91.6 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் நாட்டில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் 1.17 சதவீதமாக உள்ளது. இதன் மூலம், சிகிச்சையில் உள்ளவர்களின் விகிதம் 7.22 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன.


ALSO READ: COVID-19 Update: 24 மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் குறைவானோர் பாதிப்பு!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR