India COVID-19 Update: கடந்த 231 நாட்களில் மிகக் குறைந்த தொற்று பாதிப்பு..!!!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இப்போது 227 நாட்களில் மிகக் குறைந்த அளவிற்கு குறைந்து தற்போது 1.83 லட்சமாக உள்ளது.
புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,058 புதிய கோவிட் -19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 19, 2021) காலை தெரிவித்தது. இது 231 நாட்களில் மிகக் குறைந்த ஒரு நாள் தொற்று பாதிப்பு ஆகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இப்போது 227 நாட்களில் மிகக் குறைந்த அளவிற்கு குறைந்து தற்போது 1,83,118 ஆக உள்ளது என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிற்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மொத்த வழக்குகளில் 1% க்கும் குறைந்து தற்போது 0.54% ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 164 பேர் பலியாகினர். இதன் மூலம், இறப்பு எண்ணிக்கை 4,52,454 ஆக அதிகரித்துள்ளது.
ALSO READ | COVID-19 Update: இன்று 1,192 பேர் கொரோனாவால் பாதிப்பு; 13 பேர் உயிரிழப்பு
இருப்பினும், கேரளா தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 6,676 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 60 இறப்புகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் தற்போது 83,184 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளனர். 14 மாவட்டங்களில், எர்ணாகுளத்தில் அதிக எண்ணிக்கையாக, 1,199 தொற்று பாதிப்புகள் உள்ளன. அதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் (869) மற்றும் கோழிக்கோடு (761) உள்ளது.
இதற்கிடையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 19,470 பேர் குணமடைந்த நிலையில், இந்தியாவின் மீட்பு குணமடையும் விகிதம் இப்போது 98.14% ஆக உயர்ந்துள்ளது, மார்ச் 2020 க்குப் பிறகு தற்போது இந்த சதவிகிதம் அதிக அளவில் உள்ளது.
மறுபுறம், கடந்த 24 மணி நேரத்தில் 87 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் இப்போது 99 கோடியைத் தாண்டியுள்ளது.
ALSO READ | வேகமெடுக்கும் கொரோனா பரவல்: எச்சரிக்கும் சுகாதாரத் துறை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR