கொரோனா (COVID-19) தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெவரண்ட் டாக்டர் ஜோசப் மார் தோமாவின் 90-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் தொடக்க உரையை நிகழ்த்திய பிரதமர் மோடி(PM Narendra Modi), தனது உரையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ | காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!


"இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் வைரஸின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று சிலர் கணித்திருந்தனர். முழுமையான ஊரடங்கு காரணமாக வைரஸ் தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டது, அரசாங்கத்தால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, மக்கள் இயக்கும் இந்த போராட்டத்தில், இந்தியா மற்ற பல நாடுகளை விட மிகச் சிறந்த இடத்தில் உள்ளது. இதற்கு சாட்சியாய் இந்தியாவின் மீட்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,” என்றும் மோடி தனது மெய்நிகர் மாநாட்டில் தெரிவித்தார்.


டாக்டர் ஜோசப் மார் தோமா-வை வாழ்த்திய பிரதமர் மோடி அவருக்கு "நீண்ட ஆயுளும் சிறந்த ஆரோக்கியமும்" இறைவன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


ALSO READ | கொரோனா தொற்று மிதமான அளவில் உள்ளவர்களுக்கு ப்ளாஸ்மா சிகிச்சை பலனளிக்கிறதா…!!!


"டாக்டர் ஜோசப் மார் தோமா நமது சமுதாயத்தின் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். வறுமை ஒழிப்பு மற்றும் பெண்களுக்கான உரிமை குறித்து பிரச்சாரம் செய்தவர்" என்றும் பிரதமர் மோடி அவரை பாராட்டினார்.