அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற ஆதரவு தெரிவித்துள்ளது மெக்ஸிக்கோ.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே அமெரிக்கா, கத்தார், ஆப்கானிஸ்தான், சுவிட்சர்லாந்து என  நான்கு நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு தனது பயணத்தின் இறுதி கட்டமாக இன்று மெக்சிகோ சென்றடைந்தார். 


அங்கு அவருக்கு 'பாரத் மாதா கி ஜெய்' என கூறி சிகப்பு கம்பள வரவேற்பளித்தனர்.


மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோவும், பிரதமர் மோடியும் இருவரும் சந்தித்துப் பேசினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த இருவரும்:-


அணுசக்தி நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற மெக்சிகோ ஆதரவளிக்கும் என நீட்டோ உறுதியளித்தார். இதேபோன்று பிரதமர் மோடியும் விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளின் ஆய்வில் மெக்சிகோவுக்கு இந்தியா ஆதரவளிக்கும் என தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி கூறும் போது பிரதமராக நான் மெக்சிகோ வருவது இதுவே முதல் முறை. இந்தியாவை ஆதரித்த முதல் லத்தீன் அமெரிக்க நாடு மெக்சிகோ தான். அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இடம்பெற ஆதரவு அளித்தற்காகவும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.