பயங்கரவாதம் ஒரு பிரச்சனை இல்லையென்றால், ராகுல் காந்திக்கு பாதுகாப்பு எதற்கு என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் கேள்வி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரவாதம் ஒரு பிரச்சனையில்லை எனக் கூறும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு வழங்கி வரும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை திரும்ப ஒப்படைக்க என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பேசிய சுஷ்மா, ராகுல் காந்தி தீவிரவாதம் ஒரு பிரச்சனை இல்லை, வேலைவாய்ப்பின்மையே பிரச்சனை எனக் கூறியுள்ளார், அவ்வாறு நாட்டில் தீவிரவாதம் இல்லை எனக் கருதும் அவர் ஏன் சிறப்பு பாதுகாப்பு குழுவுடன் செல்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையும் ஆன ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல், இன்று வரை அவரது குடும்பத்தில் அனைவருக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாவலர்கள், எங்கு சென்றாலும் வருகின்றனர். மேலும் ராகுல் காந்தி செல்லும் அனைத்து இடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. 


மேலும் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது முதல் இன்று வரை ராகுல் குடும்பத்தினர் அனைவரும் சிறப்பு பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாகவும் சுஷ்மா கூறினார். மேலும் நாட்டில் தீவிரவாதம் இல்லை என்று கருதினால், தமக்கு சிறப்பு பாதுகாப்பு தேவையில்லை என எழுதிக் கொடுத்து விட வேண்டியது தானே எனவும், யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லையே எனவும் சுஷ்மா ராகுலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.