இந்தியாவின் மிக உயர்ந்த கொடிக்கம்பம்
இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நாட்டின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ்: இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நாட்டின் மிக உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த கொடிக்கம்பம் பஞ்சாப் மாநில அரசின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. 55 டன் எடை கொண்ட இதன் மொத்த செலவு ரூ.3.50 கோடி ஆகும். இதற்கு முன்னதாக ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் 293 அடி உயரக்கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டது.
360 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் இந்தியாவின் மிக பெரிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தேசியக்கொடி 120 அடி நீளமும் 80 அடி அகலமும் கொண்டது ஆகும். இந்த தேசியக்கொடி நேற்று முதல்முறையாக பறக்கவிடப்பட்டது. மத்திய அமைச்சர் அனில் ஜோஷி இதனை பறக்கவிட்டார்.
3.5 கோடி ரூபாய் செலவில் இந்த தேசியக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. லாகூரின் அன்னார்கலி பசாரில் இருந்து பார்த்தால் கூட வானில் மூவர்ண கொடி பட்டொலி வீசி பறப்பதை காண முடியும் என தெரிவிக்கப்பட்டது.