இந்தியாவின் கிராமப்புறங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாளையொட்டி, குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர், 20 ஆயிரம் கிராமத் தலைவர்களிடையே பேசிய பிரதமர் மோடி காந்தியின் கனவை நினைவாக்க 'தூய்மை இந்தியா' திட்டத்திற்கு ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.


இதை தொடர்ந்து கூறுகையில், கிராமப்புற இந்தியாவும், கிராமங்களும் 'திறந்தவெளி கழிப்பிடம் இல்லை' என தாங்களே அறிவித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்த மோடி, 60 மாதங்களில் 60 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளை கட்டி தந்ததை கண்டு, உலக நாடுகள் வியப்படைந்துள்ளன என்றும் கூறினர். உலக நாடுகள் அனைத்தும் மஹாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுகின்றன. சில நாட்களுக்கு முன், காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டு ஐ.நா. கவுரவப்படுத்தியது.


திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பது, தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு படி மட்டுமே என்று கூறிய பிரதமர், கழிப்பறை வசதி இல்லாத மக்களுக்கு விரைவில் கழிப்பறை வசதி செய்து தரப்படும் என்றும் நீர் சேமிப்புக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் அரசு செலவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, இவை அனைத்தும் காந்திக்கு மிகவும் பிடித்தவை. இவைகள் அனைத்துக்குள் பிளாஸ்டிக் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டுக்குள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழித்த நாடு என்ற இலக்கை நாம் அடைய வேண்டும்" என் அவர் கொரிப்பிட்டார்.