கொரோனா வைரசின் 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் இந்த கொரோனா வைரஸ் (Coronavirus) இரண்டாவது அலையில் முதல் அலையை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் கடும் சவாலை சந்திக்கின்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக உயிரையும் பொருட்படுத்தாமல் இடைவிடாமல் பணியாற்றும் மருத்துவர்கள் (Doctors), உயிரிழப்பது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் முதலாவது கொரோனா வைரஸ் பரவலின் போது மொத்தம் 736 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.


ALSO READ | COVID-19 in children: குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்


இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் இதுவரை 594 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் (Indian Medical Association) வெளியிட்டுள்ள பதிவேட்டின் படி, அதிகபட்சமாக  டெல்லியில் (Delhi) 107 டாக்டர்கள் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் (Tamil Nadu) இதுவரை 21 டாக்டர்களும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


IMA படி, இந்த கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் இறந்த ஐந்து மாநிலங்கள்:


1. டெல்லி (107)
2. பீகார் (96)
3. உத்தரபிரதேசம் (67)
4. ஜார்க்கண்ட் (39)
5. ஆந்திரா (32)


மருத்துவர்களின் இறப்பு தொடர்பான முழு IMA கோவிட் பதிவேட்டையும் இங்கே காணலாம்:



(Courtesy: IMA, via news agency ANI)


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR