காசர்கோடு, கன்னூர் மாவட்டங்களுக்கு மஞ்சல் நிற எச்சரிக்கை...
கேரளாவின் காசர்கோடு மற்றும் கன்னூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது!
கேரளாவின் காசர்கோடு மற்றும் கன்னூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது!
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் கேரளாவின் காசர்கோடு மற்றும் கன்னூர் மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் கேரளா முழுவதும் பருவமழை அதன் தீவிரத்தை இழந்துள்ளது. இருப்பினும் மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வானிலை எச்சரிக்கைகள் பல மாவட்டங்களுக்கு குறைக்கப்பட்டு உள்ளது.
மழையின் தீவிரம் குறைந்துவிட்டதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் சிவப்பு அல்லது ஆரஞ்சு எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்ட கனமழை மற்றும் கனமழை வாய்ப்புகளை குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சல் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இன்று கேரளாவில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கும். வடகிழக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் கனமழை நீடிக்கும். தமிழகத்தில் கனமழை வாய்ப்பு இல்லை எனவும், தென்மேற்கு மத்திய அரபிக் கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் கேரளாவில் பருவ மழை படிபடியாக குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.