உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்க, உலக சுகாதார அமைப்பு ஆலோசித்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்ள ஏதுவாக தடுப்பூசி (Corona Vaccine) செலுத்திக்கொண்டதைப் பதிவு செய்து தடுப்பூசி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன. கொரோனாவை உலகுக்கு பரப்பிய சீனா, டிஜிட்டல் வடிவ தடுப்பூசி பாஸ்போர்ட்டை (Immune Passport) அறிமுகம் செய்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஜப்பானும் இத்தகைய பாஸ்போர்ட்டுகளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.


ALSO READ | Nine Lions test positive: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா


இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைக்கொண்ட ஜி-7 அமைப்பின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தை நேற்று முன்தினம் இங்கிலாந்து நடத்தியது. அதில், இந்தியாவின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்சவர்தன் காணொலிக்காட்சி வழியாக கலந்து கொண்டு பேசினார்.


இன்னும் மக்கள் தொகையில் குறைவான சதவீதத்தினருக்குத்தான் தடுப்பூசி கிடைத்துள்ளது. இந்த நிலையில் தடுப்பூசி பாஸ்போர்ட்டு வழங்குவது என்பது மிகவும் பாரபட்சமான ஒன்றாகும். கொரோனா தொற்றை வீழ்த்துவதற்கு தற்போதைய சூழலில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அவற்றின் சமமான வினியோகத்தை உறுதி செய்வது கட்டாயமான ஒன்று.


இந்தியா அனைத்து தடுப்பூசிகளையும் 60 சதவீத அளவுக்கு உற்பத்தி செய்கிறது. மிகுந்த நிபுணத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் உலகிற்கு வினியோகம் செய்ய பொருத்தமானது. உலக சுகாதார நிறுவனத்தில் சீர்திருத்தங்களுக்கும், எதிர்காலத்தில் சிறந்த தயார் நிலையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்துக்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது.


 அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி முழுமையாக கிடைத்த பின் தான், தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி தயாரிப்பை அதிகரித்து, அனைத்து நாடுகளுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும். என்று கூறியுள்ளார்.


ALSO READ | கவனம்! கொரோனா ஆட்டம், ஆபத்தில் இந்த 16 மாநிலங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR