Breaking: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கு கொரோனா தொற்று உறுதி

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2021, 01:42 PM IST
  • உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தியை ட்விட்டர் மூலம் தெரிவித்தார் யோகி ஆதித்யநாத்.
  • யோகி ஆதித்யநாத் தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
Breaking: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கு கொரோனா தொற்று உறுதி  title=

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தனக்கு தொற்று உறுதியானதை யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்தார். 

“எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால், நான் சோதனை செய்துகொண்டேன். எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன்” என அவர் எழுதியுள்ளார். 

முன்னதாக, யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் நேற்று முதல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 

”என் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் சிலருடன் நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஆகையால், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என் பணிகளை ஆன்லைனில் செய்து வருகிறேன்” என்று அவர் ட்விட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.   

ALSO READ: Sputnik-V தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர் குழு பரிந்துரை

இந்தியாவில், மக்கள் தொகை மிக அதிகமாக இருக்கும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் தற்போது 95,980 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர். 6,18,293 பேர் குணமடைந்துள்ளனர். 80 லட்சத்துக்கும் மேலானோர் இந்த மாநிலத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.  

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்த மாத தொடக்கத்தில் லக்னோவில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை போட்டுக்கொண்டார். 

மாநிலத்தின் கோவிட் நிலைமையைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டதைத் தவிர, உத்தர பிரதேச முதலமைச்சர் தனது கட்சியான பாஜகவுக்காக, மேற்கு வங்கத்தில் (West Bengal) தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா தொற்று காரணமாக, கடந்த வாரம், உத்தரப்பிரதேச அரசு ஏப்ரல் 30 வரை அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டது. தினமும் 100-க்கும் மேலான புதிய தொற்றைக் காணும் மாவட்டங்களில் இரவு 9 முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கை அமல்படுத்தவும் உத்தரவு போடப்பட்டது. 

ALSO READ: கொரோனா நிலைமை மேம்படும் வரை Remdesivir ஊசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News