Nine Lions test positive: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா

வண்டலூர் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 4, 2021, 05:11 PM IST
  • 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு
  • உயிரிழந்தது நீலா என்கிற 9 வயதான பெண் சிங்கமாகும்.
  • ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 புலிகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
Nine Lions test positive: வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா title=

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மனிதர்களிடையே பரவி வரும் கொடிய கோவிட்-19 (Covid 19) வைரஸ், விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வந்துள்ளன. கடந்த மாதம் இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 புலிகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்தவகையில் தற்போது வண்டலூர் (Vandalur Zoo) பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ | விலங்குகளையும் விட்டுவைக்காத கொரோனா! 8 சிங்கங்கள் கோவிட் பாசிட்டிவ்!

அங்குள்ள, 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால், அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் முடிவுகளில், 9 சிங்கங்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. பணியாளர்கள் மூலமாக விலங்குகளுக்கு கோவிட் தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகிகள் விசாரிக்கின்றனர்.

உயிரிழந்தது நீலா என்கிற 9 வயதான பெண் சிங்கமாகும். இதேபோல் மேலும் 9 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மற்ற விலங்குகளுக்கும் தொற்று இருக்கிறதா என்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

ALSO READ | கோவையில் ஆன்லைன் மூலம் கோழி இறைச்சி, முட்டை விற்பனைக்கு அனுமதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News