India Population Census: இந்தியாவில் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறையும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மத்திய அரசால் நடத்தப்படும். அந்த வகையில், 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தோற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது தள்ளிவைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், சுமார் மூன்றாண்டுகள் கடந்த பின்னரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகளை எழுப்பியது. மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததால் பொருளாதாரம் சார்ந்த தரவுகள், பணவீக்கம், வேலைவாய்ப்பு மதிப்பீடுகள் உள்ளிட்ட பல புள்ளிவிவர ஆய்விகளின் தரம் பாதிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.


உலகின் மக்கள்தொகையில் முதலிடம்


மக்கள்தொகை கணக்கெடுப்பை முழுவதுமாக நடத்தி முடிக்க 18 மாதங்கள் ஆகும் என கூறப்படும் நிலையில், தற்போது அரசிடம் உள்ள தரவுகள் அனைத்தும் 2011ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையிலேயே உள்ளது. எனவே, விரைவாக மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. 


மேலும் படிக்க | மண்டல் vs கமண்டலம் : ஜாதிவாரி கணக்கெடுப்பு - யாருக்கு பயன்?


முன்னதாக, உலகின் மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா, சீனாவை மிஞ்சி முதலிடத்தை அடைந்துவிட்டதாக கடந்தாண்டு ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்தது. அதாவது, உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்தியாவில் அதிகாரப்பூர்வமான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாதது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 


சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு?


இதுஒருபுறம் இருக்க, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றன. இதனால், கல்வி, வேலைவாய்ப்பில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டு முறையை சீர்படுத்த சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை என வாதிடப்படுகிறது. பீகார் மாநில அரசு சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை அறிவித்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 


செப்டம்பரில் தொடங்குமா கணக்கெடுப்பு?


இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் மத்திய அரசின் தரப்பில் இருந்து பெயர் வெளிப்படுத்த விரும்பாத இரண்டு பேர் Reuters செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த உள்துறை அமைச்சகமும், புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் ஒரு காலக்கெடுவை உருவாக்கும் என கூறப்படுகிறது. 


அதன்மூலம், 2011ஆம் ஆண்டுக்கு பின் 15 ஆண்டுகள் காலத்தை கணக்கில் கொண்டு 2026ஆம் தேதி மார்ச் மாதம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகளை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பிரதமர் அலுவலகத்தில் இருந்து முறைப்படி வரும் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கணக்கெடுப்பு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என வெளியான தகவல்கள் குறித்து Reuters மின்னஞ்சல் மூலம் உள்துறை அமைச்சகம் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்திடம் கருத்து கேட்டதற்கு, இதுவரை பதில் வரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.    


மேலும் படிக்க | 2 சிறுமிகளுக்கு பள்ளி கழிவறையில் நேர்ந்த கொடுமை... அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் - அதிர்ச்சி சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ