பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு புதிய கொரோனா தொற்று!
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, 33,000 பேரில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது..!
நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, 33,000 பேரில் 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது..!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரின் கண்களும் கொரோனா தடுப்பூசிக்காக (CORONAVIRUS VACCINE) காத்திருக்கின்றன. இதற்கிடையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் (New strain coronavirus) 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தெரிவித்தது.
இந்நிலையில், பிரிட்டனில் (Britain) இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு (new Covid-19 strain) உறுதியானது என்றும் அவர்கள் 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
ALSO READ | தனது முதல் உள்நாட்டு நிமோனியா தடுப்பூசியை அறிமுகம் செய்தது இந்தியா!
பிரிட்டனில் உருமாறிய வைரஸ் பரவலால் கடும் ஊரடங்கு உத்தரவு (Lockdown) பிறப்புக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் பிரிட்டனில் இருந்து விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்தியாவிலும் பிரிட்டன் (Britain) விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீப காலத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களை சோதனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால், அவர்களின் சளி மாதிரி, புனேவில் இருக்கும் ஆய்வகத்துக்கு (INSACOG labs) அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதியானது என்றும் அவர்கள் 6 பேரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
ALSO READ | ATM-யில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.!
மேலும், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது என்றும், அதில், 114 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR