எல்லையில் அத்துமீறும் பாக்கிஸ்தான்; எச்சரிக்கும் இந்தியா!
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது!
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது!
எல்லை தாண்டிய பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...
பாகிஸ்தான் படைகள் இந்த ஆண்டு 1,962 எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த அத்துமீறிய தாக்குதல் சம்பவங்களினால் 50 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 மற்றும் 26–ஆம் தேதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் இந்திய மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இறந்துள்ளனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்குள் ஆதரித்து வருவது குறித்தும், பாகிஸ்தான் ராணுவம் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்தும் நமது வருத்தத்தை பதிவுசெய்ய விரும்புகிறோம். பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்த பகுதியிலும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை அனுமதிக்கக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளது.