சமூக ஊடகத்தில் COVID-19 வதந்திகள்; உலகில் முதலிடம் வகிக்கும் இந்தியா..!!
உலக அளவில் கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிக அளவில் பரவியது என்றாலும், இந்தியா இதில் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
COVID-19 பரவல் தொடங்கியதிலிருந்தே, நோயிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும், எதை சாப்பிட வேண்டும் என தினம் தினம் வாட்ஸ் அப், பேஸ் புக்கில் தகவல்கள் வந்து கொண்டே இருந்ததை நாம் கண்டோம். வாட்ஸ் அப் மருத்துவர்களும், கருத்து கந்தசாமிகளும் அறிவுறைகளையும், ஆலோசனைகளையும் வாரி வழங்கினார்கள்.
அதே போன்று கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) அறிமுகப்படுத்தப்பட்ட போதும் கூட, மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை விதைக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஆண்மை போய்விடும், உடலில் காந்த சக்தி உருவாகும் என பல விதமான தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அதனாலேயே, ஆரம்ப கட்டத்தில் பலருக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் ஏற்பட்டது.
உலக அளவில் கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிக அளவில் பரவியது என்றாலும், இந்தியா இதில் முதலிடம் வகிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
கனடாவில் உள்ள ஆல்பெர்டா பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆய்வு குறித்து வெளியான அறிக்கையில், 2020 ஜனவரி மாதம் முதல், 2021 மார்ச் மாதம் வரை 138 நாடுகளில் 9,657 தவறான தகவல்கள் பரப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
கொரோனா வைரஸ் பவலில் இருந்து தப்பிக்க, மூக்கில் எலுமிச்சை சாறை விடுவது, வெளியில் செல்லும் போது பாக்கெட்டில் கிராமு, ஏலக்காய், கற்பூரம் ஆகியவற்றை வைத்துக் கொள்வது, போன்ற ஆலோசனைகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின.
கொரோனா குறித்த தவறான, போலியான தகவல்கள் பரவியதில், 85% சமூக ஊடகம் மூலம் பரவியதாகவும் கூறப்படுகிறது. இதில் 91% இணையதள தகவல்களை அடிப்படையாக கொண்டது. உலகில் பரவிய கொரோனா தொடர்பான தவறான தகவல்களில் 18% துடன் இந்தியா முதலிடத்திலும், அடுத்ததாக பிரேசில் 9 சதவிகிதத்திலும், அமெரிக்க 8.6% சதவிகிதம் என்ற அளவிலும் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொடர்பான தவறான தகவல்களுக்கு தகவல் தொடர்பு கட்டமைப்பில் குரைபாடு, மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாதது தான் காரணம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | செப்டம்பர் 12: தமிழகத்தில் இன்று 1608 பேருக்கு புதிதாக பாதிப்பு, 22 பேர் பலி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR