நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்திய புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 12 நாட்களாக பதிலடி குறித்து ஆலோசனை மற்றும் அதற்க்கான செயல்பாடுகளை குறித்து நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்ட வந்த முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் மொத்தம் 12 இந்திய மிராஜ் 2000 போர் விமானம் ஈடுபடுத்தப்பட்டன. சுமார் 21 நிமிடங்கள் நடந்த பதிலடி தாக்குதலில், அந்த பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலும் அழிக்கபட்டது. இந்த தாக்குதலில் 7 விதமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என கூறப்பட்டு உள்ளது. 


ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசாரின் மாமனார் உட்பட பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 12 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன எனவும் கூறப்பட்டது. 


இந்தநிலையில், தற்போது பதிலடி தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதில் முப்தி அசார் கான், மசூத் அசாரின் மூத்த சகோதரர் இப்ராஹிம் அசார், மவுலானா அமர், மவுலானா தல்ஹா சைப் ஆகியோரின் புகைபடங்கள் வெளியாகி உள்ளது.