புதுடெல்லி / ஸ்ரீநகர்: எல்லையில் ஊடுருவலுக்கான பெரும் சதியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த ஊடுருவல் முயற்சி கடந்த ஜூலை 30 அன்று நடந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு (LOC) அருகிலுள்ள குப்வாரா (Kupwara) செக்டரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோவில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சிப்பதைக் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்லையில் பயங்கரவாதிகளின் ரகசிய ஊடுருவல் குறித்து இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பின்னர், இந்திய ராணுவம் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது. இதனையடுத்து பயங்கரவாதிகள் பின்வாங்கினார்கள். பயங்கரவாதிகளைத் திரும்பி செல்லுமாறு இந்திய இராணுவம் கட்டாயப்படுத்தியதை அடுத்து பயங்கரவாதிகள் ஓடினார்கள். இந்த பயங்கரவாதிகள் எல்லை அருகே இருக்கும் பாதுகாப்பு படை வீரர்கள் தாக்க வேண்டும் என்ற நோக்கில் ஊடுருவ முயன்றனர்.


 



அதேபோல செப்டம்பர் 12 மற்றும் 13 நள்ளிரவில் ஹாஜிபூர் துறையில் எல்லைக்கோடு (LOC) அருகே பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் குழு 'பேட்' (BAT Border Action Team) ஊடுருவ முயற்ச்சியை மேற்கொண்டது. அப்பொழுது இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. எல்லையில் பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்பது வீடியோ மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 15 ஊடுருவல் முயற்சிகளை முறியடித்தன.


இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைய முயற்சிப்பதை இராணுவ வட்டாரங்கள் வெளியிட்ட வீடியோவில் தெளிவாகக் காணலாம். நைவ் விஷன் கேமராவில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களில் ஊடுருவும் நபர்கள் காணப்படுகிறார்கள். எல்லையில் ஊடுருவ முயற்ச்சி செய்த பயங்கரவாதிகளின் மீது இந்திய பாதுகாப்பு படையினர் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழுவின் இந்த கமாண்டோக்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் பீப்பாய் கைக்குண்டு ஏவுகணைகள் இருந்தன.


ஹாஜிபூர் துறையில் செப்டம்பர் 10-11 அன்று பாகிஸ்தான் செய்த யுத்த நிறுத்த மீறலுக்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. அந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் 2 வீரர்களையும் இந்தியா கொன்றது. இந்திய இராணுவத்திற்கு வெள்ளைக் கொடியைக் காட்டி தனது வீரர்களின் சடலங்களை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.