வடக்கு சிக்கிம் பொழிந்து வரும் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான பனிப்பொழிவில் சிக்கி தவித்த 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவ படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வட சிக்கிமில் உள்ள பிரபல சுற்றலா தளமான லச்சாங் பள்ளத்தாக்கு பகுதியில், கடுமையான பனிப்பொழிவில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவித்து வந்தனர். இவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் முடக்கப்பட்டது. இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர், பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலினை இந்திய ராணுவத்துறை வெளியிட்டுள்ளது.



பள்ளத்தாக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்க த்ரிஷக்தி கார்ப்ஸ் துருப்புக்கள் "விரைவான எதிர்வினை குழுக்கலாக(QRT)" முடக்கிவிடப்பட்டது. இந்த குழுவில் மருத்துவப் பணியாளர்கள் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இராணுவ வாகன்னத்தின் மூலம் சென்ற மீட்பு குழு, பனிச்சரிவில் சிக்கிருந்த பயணிகளை மீட்டு, முதலுதவி செய்து பின்னர் அருகில் இருந்த ராணுவ முகாமிற்கு கொண்டு சென்றனர். 


மீட்கப்பட்ட பயணிகளில் முதியவர்களும், குழந்தைகளும் இடம்பெற்றிருந்தனர். முதியவர்கள் மூச்சு திணறலால் சிரமப்பட, அவர்களுக்கு உதவும் வகையில் சுவாசு குழாய்களை கொண்டு மருத்துவ முகாமிற்கு மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளனர்.


மீட்கப்பட்ட பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் பனிப்பொழிவு 10 டிகிரி எட்டிய நிலையில் பயணிகள் நகர் பகுதிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் ஆங்காங்கே சிக்கி தவித்த சுற்றுலா பயணிகளை மீட்ட ராணுவ வீரர்கள், பயணிகளை மீட்டு முகாமில் தங்க வைததது தெரியவந்துள்ளது.


தற்போது நிகழ்ந்து வரும் குளிர் காலத்தில், இரண்டாவது முறையாக இத்தகு மிகப்பெரிய மீட்பு பணி நிகழ்ந்த்துள்ளது குறிப்பிடத்தக்ககது. முன்னதாக கடந்த டிசம்பர் 28-ஆம் நாள் சிக்கிமின் நாத்துல்லா கனவாய் பகுதியில் இருந்து 3000 சுற்றுலா பயணிகளை மீட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஒரே இரவில் 150 பயணிகளை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.