இந்திய கடற்படையின் கிழக்கு பிரிவு தற்போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகள் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அமெரிக்க போர் கப்பலான நிமிட்ஸ் (Nimitz) தலைமையிலான அமெரிக்க கடற்படை, இந்திய போர்க்கப்பல்களுடன், இந்த வாரம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே கடல்சார் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சீனா எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக, அமெரிக்காவுடான கடற்பயிற்சி முக்கியத்துவம் பெறுகிறது.


USS Nimitz மலாக்கா ஜலசந்தியைக் கடந்து, பாரசீக வளைகுடா பகுதியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.


ALSO READ | அமெரிக்காவிற்கு உளவு பார்த்த உளவாளியை தூக்கிலிட்டது ஈரான்..!!!


"திட்டமிடப்பட்ட கடல்சார் பயிற்சிகளுக்கு பதிலாக, ஒரு வாய்ப்பு உருவாகும் போதெல்லாம் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. மலபார் பயிற்சி இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்படும். அதே வேளையில், நட்பு நாடுகளின் கடற்படையினர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்   பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது”என்று கடற்படை விவகார நிபுணரும் ஓய்வு பெற்ற கடற்படை தலைவரும் ஆன டி.கே.ஷர்மா கூறினார்.


அமெரிக்க போர் கப்பல் நிமிட்ஸ் உடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது தொடர்பாக  இந்திய கடற்படையிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் தீவுகளிலிருந்து 350 கி.மீ தூரத்தில் உள்ள மலாக்கா நீரிணை வழியாக சீன எண்ணை இறக்குமதிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அணு ஆயுதங்களை கொண்ட யுஎஸ்எஸ் நிமிட்ஸ், உலகின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.  இது தென் சீனக் கடலில் செயல்படும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன்  போர் கப்பல் தென் சீனக் கடலில் பயிற்சியை மேற்கொண்டது.


ALSO READ | சீண்டாதே சிக்கிக்கொள்வாய்!! அமெரிக்காவில் நடத்திய போராட்டத்தில் சீனாவை எச்சரித்த அமெரிக்க இந்தியர்கள்!!


அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இந்தியா நடத்தும் அடுத்த மலபார் கடற்படைப் பயிற்சியில், ஆஸ்திரேலியாவும் இணைய உள்ளது.