Indian Railway Latest News: இந்திய ரயில்வே எடுத்திருக்கும் புதிய முடிவைக் கேட்டால் உங்களுக்கு ஆச்சர்ர்யமும் வியப்பும் மேலிடும். ரயில்வே துறை தன் வசமுள்ள அச்சகங்களை மூட ரயில்வே முடிவு செய்துள்ளது. வரும் காலங்களில், அவர்களின் ஒப்பந்தம் தனியார் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படலாம். டிஜிட்டல் இந்தியாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கும் போது ரயில்வே வாரியம் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. 2017-ம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல்  மூலம் இது குறித்த ஒரு முடிவு எடுக்கப்பட்டு, அதில் ரயில்வேயால் இயக்கப்படும் அச்சகத்தை மூடுவது பற்றி பேசப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அச்சிடுவதற்கான முழு ஒப்பந்தமும் தனியாருக்கு வழங்கப்படும்


ரயில்வேக்கு சொந்தமான அச்சகங்கள் மூடப்பட்ட பிறகு, அச்சடிக்கும் ஒப்பந்தம் முழுவதும் தனியார் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும். இதையடுத்து அச்சகத்தை மூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முன்னதாக சில அச்சகம் மூடப்பட்ட நிலையில், சில இயக்கப்பட்டன. இப்போது அவற்றையும் மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 14 அச்சகங்களில் 9 அச்சகங்களை மூட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 5 அச்சகங்கள் ரயில்வே கட்டுப்பாட்டில் இருந்தன. தற்போது இந்த அச்சகங்களையும் ரயில்வே துறை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.


2019 ஜூன்  மாதம் கடிதத்தில், அச்சகத்தை மூட உத்தரவு


சமீபத்தில், ரயில்வேயின் உத்தரவில், பைகுல்லா மும்பை, ஹவுரா, ஷகுர்பஸ்தி - டெல்லி, ராயபுரம் சென்னை, செகந்திராபாத் ஆகிய இடங்களில் இயங்கும் அச்சகங்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூன் 4, 2019 தேதியிட்ட அதன் கடிதத்தில், அச்சகத்தை மூடுவதாகக் கூறப்பட்டது. இந்தச் செய்திகளுக்குப் பிறகு இனி வரும் காலங்களில் ரயில்வே டிக்கெட்டுகள் எப்படி அச்சிடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


மேலும் படிக்க |  பெங்களூரு - சென்னை ஒகாலிபுரம் காரிடர் பணிகள் எப்போது நிறைவேறும்? ரயில்வே பதில்


தனியார் பிரிண்டர்களுக்கு டெண்டர்


இதற்காக, வரும் காலங்களில் தனியார் பிரிண்டர்களுக்கு டெண்டர் விடுவது அரசின் முயற்சியாக உள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன. டிக்கெட் அச்சடிப்பதற்கும், இதர பொருட்களை தயாரிப்பதற்குமான ஒப்பந்தம் தனியார் அச்சகத்திலேயே கொடுக்கப்படும். தற்போது ரயில்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வே வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான டிக்கெட்டுகள் இ-டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது தவிர, 81 சதவீத டிக்கெட்டுகள் இ-டிக்கெட் மூலம் டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யப்படுகின்றன.


மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! லோயர் பெர்த்தின் விதிகளை மாற்றியது ரயில்வே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ