சியாச்சின், டோக்லாம் போன்ற பிராந்தியங்களில் பணியில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு நல்ல உணவு, உடை மற்றும் உபகரணங்கள் கிடைப்பதில்லை என CAG தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சியாச்சின், லடாக், டோக்லாம் போன்ற உயரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படையினருக்கு தேவையான கலோரிகள் கிடைக்கவில்லை, மேலும் அவர்களுக்குத் தேவையான சிறப்பு ஆடைகளை வாங்குவதில் நீண்ட கால தாமதமும் ஏற்பட்டது என்று 2017-18 CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இடுகையிடப்பட்ட படையினருக்கு சிறப்பு ரேஷன் வழங்கப்படுகிறது.


பிப்ரவரி 3 ஆம் தேதி (திங்கட்கிழமை) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உடைகள் மற்றும் உபகரணங்களின் பழைய விவரக்குறிப்பால் படையினருக்கு சிறந்த உடைகள் மற்றும் உபகரணங்கள் சரியாக கிடைக்கவில்லை என்று கூறியுள்ளது. சியாச்சின் மற்றும் டோக்லாம் ஆகிய பனிப்பிரதேச எல்லைகளில், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு, கடுங்குளிரை சமாளிப்பதற்குத் தேவையான உணவும், உறைபனி தடுப்பு கவச உடைகளும், சரியாக கிடைப்பதில்லை என இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அமைப்பான CAG தெரிவித்திருக்கிறது.


 நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அந்த அமைப்பின் அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு முதல், 2018 ஆம் ஆண்டு வரையில், பனிப்பிரதேச பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கான, சிறப்பு உடைகள் உள்ளிட்டவற்றின் கொள்வனவில் கடுமையான தேக்கநிலை நீடித்துள்ளதாக CAG தெரிவித்திருக்கிறது.


இதனால், சியாச்சின், டோக்லாமில், உறைபனி சூழ்ந்த பகுதியில், நாட்டை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கு, சீருடைகள், உணவு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.