டெல்லியை சேர்ந்த இளம் பெண் டாக்டர் உஸ்மா பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தாகிர் அலியை மலேசியா சென்றபோது காதலித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் கடந்த 1-ம் தேதி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். இருவருக்கும் திருமணம் நடந்து உள்ளது. இதனையடுத்து இந்திய தூதரகத்தை நாடிய உஸ்மா தன்னுடைய நிலை குறித்து எடுத்துரைத்து, இந்தியாவிற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். தூதரகம் உதவியுடன் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டை நாடிய உஸ்மா,


நண்பரான தாகிர் அலியை சந்திக்க பாகிஸ்தான் வந்தேன். ஆனால், தாகிர் அலியும், அவருடைய நண்பர்களும் துப்பாக்கி முனையில் என்னை மிரட்டினர். சித்ரவதை செய்தனர். அதனால் வலுக்கட்டாயமாக இந்த திருமணம் நடந்தது.


திருமணத்துக்கு பிறகு தாகிர் அலி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் மேலும் எனது பயண ஆவணங்களையும் பறித்துக்கொண்டனர். மேலும், தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், 4 குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிய வந்தது. அவற்றையெல்லாம் அவர் என்னிடம் மறைத்து விட்டார். அவருடைய குடும்பத்தினர் பேசும் மொழியையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபற்றி டெல்லியில் உள்ள என் சகோதரரிடம் கூறியபோது, அவர் இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறினார். அதனையடுத்து தூதரகத்தை அனுகினேன் என்றார்.


இருதரப்பு வாதத்தையும் கேட்ட இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு, உஸ்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில் இந்தியாவிற்கு திரும்ப உதவி செய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்ததை ஏற்றுக் கொண்டது. 


உஸ்மா இந்தியா திரும்ப அனுமதி அளித்தது, அவர் வாகா எல்லையை அடையும் வரையில் பாகிஸ்தான் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 


இந்நிலையில் அட்டாரி - வாகா எல்லையின் வழியாக அவர் இன்று இந்தியாவிற்கு வந்தார். அப்போது இந்திய மண்ணை தொட்டு கும்பிட்டு வந்தார்.