Independence Day : இந்தியா ஆங்கிலேயர் பிடியில் இருந்து சுதந்திரம் அடைந்து 78வது ஆண்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் வெறும் பொதுவிடுமுறை மட்டும் அல்ல, சமத்துவம், நீதி மற்றும் தேசத்துக்காக தன்னை அர்பணித்துக் கொண்டவர்களை நினைவு கூறும் நாளும்கூட. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

78வது சுதந்திர தினவிழாவின் முக்கியத்துவம்


சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு கொடுங்கோண்மை ஆட்சி செய்து கொண்டிருந்த வெள்ளையர்களை வெளியேற்றி, முழு சுதந்திர நாடாக பிரகடனமான நாள் தான் ஆகஸ்ட் 15. இந்த சுதந்திரம் வெறுமனே கிடைத்துவிடவில்லை. பல்லாயிரக்கணக்கானோரின் தியாகத்தால், ரத்தத்தால் கிடைத்தது. ஆயிரம் ஆயிரம் மக்கள் இந்த சுதந்திரத்துக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களை எல்லாம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தேச உணர்வோடு நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் நாள். 


மேலும் படிக்க | முகப்பருவுக்கு எச்சில் சிறந்த மருந்து? தமன்னா சொன்ன மேட்டர் - உண்மையா?


இந்தியாவின் சுதந்திர தின வரலாறு


இந்தியாவை ஆங்கிலேயேர்கள் சுமார் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற பிறகு சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் முதல் தேசியக் கொடியை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் ஏற்றினார். அப்போது இருந்து வருடந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. 


சிறப்பு நிகழ்ச்சிகள்


இந்த ஆண்டும் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்ற இருக்கிறார். அப்போது இந்தியாவின் முப்படைகளின் அணி வகுப்பு நடைபெறும். ராணுவத்தின் வலிமை அப்போது தான் உலகிற்கு பறைசாற்றப்படும். ராணுவம், விமானப்படை, கடற்படை வீரர்களின் அணி வகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளும் செங்கோட்டை வளாகத்தில் நடக்கும். இதுதவிர ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரம், பள்ளி கல்லூரிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும். 


சுந்திர தின விழா கருப்பொருள்


நாட்டின் 78வது சுதந்திர தினமான இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விக்சித் பாரத் என்ற கருப்பொளின் அடிப்படையில் கொண்டாடப்பட இருக்கிறது. அதாவது 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இந்த சுதந்திர தினத்தின் நோக்கமாகும். இதனையொட்டி உறுதிமொழியும் எடுக்கப்பட உள்ளது. 


மேலும் படிக்க | கவரிங் மற்றும் தங்க நகைகளை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ