இந்தியாவில், நேற்று மட்டும் 25,153 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவிலும் கொரோனா (Coronavirus) தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துவிட்டது. தற்போது, கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 10 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மொத்த மீட்டெடுப்புகளின் எண்ணிக்கை 95.50 லட்சமாக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சின் (Health Ministry) தகவல்கள் தெரிவிக்கின்றன. 


நாட்டின் COVID-19 பாதிப்புகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் தாண்டியது. அமெரிக்காவில் ஒரு கோடியே 78 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துவிட்டது. அதேவேளையில், ஆறுதல் அளிக்கும் விதமாக, 95 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | அமெரிக்காவில் Moderna தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் தகவல்!


இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 45 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருக்கின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது கட்டாயம் அல்ல என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் (Health ministry) தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், 'விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும். விருப்பப்பட்டால் அதனை போட்டுக்கொள்ளலாம். கொரோனாவுக்கு எதிரான தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது' என்று குறிப்பிட்டுள்ளது.


சுகாதார அமைச்சின் சனிக்கிழமை வெளியிடபட்டுள்ள தரவின்படி, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,00,04,599 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 1,45,136 ஆகவும் காட்டப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் சுமார் 347 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், COVID-19 பாதிப்பின் இறப்பு விகிதம் மேலும் 1.45 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் 3,08,751 செயலில் உள்ள வழக்குகள் உள்ளன. அது 3.08 சதவீதமாக உள்ளன.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR