இந்திய விஞ்ஞானிகள் 5 ஆண்டுகளாக தீவிர முயற்சிக்கு பின் உருவாக்கப்பட்ட விண்கலம் விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த தொழில்நுட்பம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்க்கு முன்பு செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பப்பட்ட தங்கள் வேலை முடிந்ததும் விண்வெளியிலேயே செயற்கைக்கோள்கள் எரிந்து விடும் அல்லது கடலில் விழுந்துவிடும். ஆனால் தற்போது மறு பயன்பாட்டு விண்கலம் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளத்தால் விண்ணில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் மீண்டும் பூமிக்கு திரும்பி மறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். இதனால் செலவு மிச்சம் ஆகும்.


ஆர்.எல்.வி.-டி.டி. என்ற இந்த விண்கலம் ரூ.95 கோடியில் தயாரிக்கப்பட்ட 1.75 டன் எடை கொண்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஆர்.எல்.வி., விண்கலம் பூமியிலிருந்து விண்ணில் 70 கி.மீ தூரம் சென்று பின்னர் வங்கக்கடலில் விழுந்தது.


மறு பயன்பாட்டு விண்கலம் ஆனா ஆர்.எல்.வி.-டிடி விண்கலம் சோதனை வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.