இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) போர்க்கப்பல், அடுத்தாண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த்  ஐந்து நாட்கள் கடலில் வைத்து வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை கொச்சிக்கு திரும்பியது.


உலகின் வலிமை வாய்ந்த கடற்படைகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்நிலையில், அதற்கு மேலும் மகுடம் சேர்க்கும் வகையில், ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) போர்க்கப்பல், கடற்படையில் விரைவில் இணையவுள்ளது. கேரளாவின் கொச்சி துறைமுகத்தில் கட்டப்பட்ட இந்த கப்பல் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மிக பிரம்மாண்டமாக  பல அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கட்டப்பட்டது இந்த கடற்படை கப்பல். 


40 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த அதிநவீன போர்க்கப்பல், 262 மீட்டர் நீளமும் 62 மீட்டர் அகலமும் கொண்டது. இதில், 1,700 மேலான மாலுமிகள் பயணிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | ட்விட்டரில் அசத்தும் பிரதமர் மோடி: 70 மில்லியனைத் தாண்டியது ஃபாலோயர்களின் எண்ணிக்கை


"ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா" என பெயர் சூட்டப்பட்ட, ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட ஒரேயொரு விமானந்தாங்கி போர்க்கப்பல் மட்டுமே இந்தியாவிடம் தற்போது உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட உள்ளது. இதனால், சொந்தமாக போர்க்கப்பல் தயாரிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைகிறது.


இந்த கப்பல் குறித்து கருத்து தெரிவித்த கடற்படை செய்தித்தொடர்பாளரான கமாண்டர் விவேக் மத்வால்,  ‘ இவ்வளவு அதி நவீனமான பிரம்மாண்டமான போர்க்கப்பல் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்டிருப்பது, மேக் இன் இந்தியா திட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாக குறிப்பிட்டார். 


ALSO READ | ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR