இண்டிகோ விமானத்துக்கு மர்மநபர் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் ஜெய்பூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்துக்கு விடுக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



 


இந்த மிரட்டல் இண்டிகோ சேவை மையத்தில் அழைத்து விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 5:30 மணியளவில் மர்மநபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைப்பு விடுத்த நபர் ஜெய்பூர் - மும்பை இடையில் சேவையில் இருக்கும் 6E 218 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இந்த அழைப்பு வருவதற்கு முன்னதாக விமானம் புறப்பட்டுவிட்டது. 5:05 மணிக்கு ஜெய்பூரில் இருந்து புறப்படும் விமானம் காலை 7 மணிக்கு மும்பையை சென்றடையும், அதன்படி விமானம் சென்றடைந்தது. இதற்கிடையே விமான நிறுவனம் வெடிகுண்டு அச்சுறுத்தல் மதிப்பீட்டு குழுவிற்கு அழைப்பு விடுத்தது, விதிமுறைகளின்படி தகவல் தெரிவித்தது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் புரளி என தெரியவந்தது. மர்மநபர் தொலைபேசியில் விடுத்த மிரட்டலை அடுத்து விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.