இன்போசிஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவரான நிதேஷ் பங்கா இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்போசிஸ் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவரான நிதேஷ் பங்கா, பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமான குளோபல் லோஜிக்கில் இணைந்துள்ளார் குளோபல் லோஜிக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துறையில் பங்கா டெலிவரி, செயல்பாடுகள், திறன்களை ஆட்சேர்ப்பு மற்றும் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு மூலோபாயம் ஆகிய துறைகளை பார்த்துக் கொள்வார் என தெரிகிறது. மேலும் இவர் குளோபல் லோஜிக்ஸ் செயல் தலைவர் சாஷாங் சமாண்டின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பார் எனவும் தெரிகிறது.


பிரபல வேலைத்தேடல் வலைதளமான LinkedIn தகவளின்படி, பாங்கா 2007-ஆம் ஆண்டு முதல் இன்போசிஸில் பணிபுரிந்து வருகின்றார். அந்நாள் முதல் இன்போசிஸில் பல்வேறு துறைகளில் தனது திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாப சில்லி பரேக் பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அந்நிறுவனத்தில் இருந்து முக்கிய பொருப்பு அதிகாரி வெளியேறுவது குறிப்பிடத்தகது.


பாங்கா இன்சோஸ்ஸில் இணைவதற்கு முன்னதாக, இதே நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் வியாபார பிரிவின் மூத்த துணைத் தலைவராக பதவிவகித்தார். அதே வேலையில் எட்ஜ்வேர் மென்பொருள் துணை நிறுவனங்களின் உறுப்பினராகவும் இருந்தார்.


சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் அமைந்திருந்த இன்போசிஸில் பாங்கா இருந்துவந்தார். தற்போது குளோபல் லோஜிக்ஸில் பங்கா எந்த பகுதியில் இருந்து செயல்படுவார் என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.