இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து இலங்கையில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 


மேலும் படிக்க | விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி முறியடிப்பு


இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒட்டி, மாநில புலனாய்வுத்துறையினரும், உள்ளூர் காவல்துறையினரும் இணைந்த சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுவும் கடல் எல்லையில் ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளது.


இதுகுறித்து மீனவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள போலீசார், சர்வதேச கடல் எல்லையிலும், ஆழ்கடலிலும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது நபர்கள் தென்பட்டால் உடனடியாக  தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் செயல்படாத வங்கிக்கணக்குகளில் போலி ஆவணங்கள் மூலம் பெரும் தொகையை பரிமாற்ற முயன்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம் சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சீரமைப்பதற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பிரபாகரனால் முடியாததை ராஜபக்‌ஷே செய்துவிட்டார் - இலங்கை எம்.பி சர்ச்சை பேச்சு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe