விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி முறியடிப்பு

 விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிப்பதற்காக ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்திய முன்னாள் விடுதலைப் புலிகளை என்ஐஏ கைது செய்தது

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 7, 2021, 03:00 PM IST
  • விடுதலைப் புலிகள் இயக்கத்தை புனரமைக்கும் முயற்சிகள்
  • ஈடுபட்ட முன்னாள் விடுதலைப் புலி சென்னையில் கைது
  • போதைப்பொருள், ஆயுதக் கடத்தல் மூலம் நிதி திரட்டப்பட்ட அதிர்ச்சித் தகவல்
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் அளிக்கும் முயற்சி முறியடிப்பு

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக ஆயுதங்கள், போதைப்பொருட்களை கடத்தியவரை தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ கைது செய்தது

சென்னை: இந்தியாவின் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) சென்னையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து முன்னாள் விடுதலைப் புலிகள் புலனாய்வு பிரிவு உறுப்பினரை கைது செய்தது. 300 கிலோ உயர்தர ஹெராயின், 1000 ஏபிஎம் 9 ரவுண்டு குண்டுகளுடன் 5 ஏகே -47 துப்பாக்கிகள் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டது என தேசிய புலனாய்வு முகமை கூறுகிறது.

கடலோர காவல்படை (ஐசிஜி), இந்த ஆண்டின் தொடக்கத்தில் இது குறித்த துப்புக் கொடுத்தது.

செவ்வாய்க்கிழமையன்று, சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 47 வயதுடைய சபேசன் என்ற இலங்கைக் குடிமகனை என்.ஐ.ஏ கைது செய்தது. அவர் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தி, அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான எல்டிடிஈயை புனரமைப்பதற்கு பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

READ ALSO | ₹100 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல்.. சிக்கிய இலங்கை தமிழர்கள்..

"குற்றவாளி சற்குனம் என்ற சபேசன் இந்தியாவில் விடுதலைப்புலிகளின் ஆதர்வாளர்கள் கலந்துக் கொள்வதற்காக கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. புலிகளை மீண்டும் இயக்கத்திளின் மறுமலர்ச்சிக்காக இலங்கையில் முன்னாள் புலிகளுக்கு போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொடுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்று கூறப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் புகாரின் அடிப்படையில் மே 1 முதல் என்ஐஏ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.  

இந்த ஆண்டு மார்ச் மாதம் போதை மருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் பற்றி ஜீ மீடியா செய்தி வெளியிட்டிருந்தது. போதைப்பொருள் கடத்தல் பற்றிய துப்பு கிடைத்ததன் அடிப்படையில், இந்திய கடலோர காவல்படை விமானம் மற்றும் அதிகாரிகள், மார்ச் 18 அன்று இந்தியாவின் மேற்கு கடற்கரையில் லட்சத்தீவு பகுதியில் நடவடிக்கை மேற்கொண்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.

READ ALSO | குஜராத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல்!

மூன்று கப்பல்களில் நடத்திய தேடுதல் வேட்டையில், 300 கிலோ உயர்தர ஹெராயின், 5 ஏஜி -47 துப்பாக்கிகள் 1000 ரவுண்ட் குண்டுகள் ஆகியவை ரவிஹான்சி என்ற கப்பலில் இருந்து பறிமுதல் செய்தது. கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பொருட்களின் மதிப்பு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கூட்டு விசாரணை நடத்துவதற்காக, படகுகள் மற்றும் 19 பேர் கேரளாவின் விழிஞ்சம் என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்திய கடலோர காவல்படையின் கூற்றுப்படி, இது 2021 மார்ச் மாதத்தில் மேற்கு கடற்கரையில் அவர்கள் மேற்கொண்ட இரண்டாவது பெரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையாகும்.

மார்ச் 5 ஆம் தேதி, இதேபோன்ற நடவடிக்கையில், இலங்கை கப்பலான அகர்ஷா துவாவை, ஐசிஜி, சிறை பிடித்தது. மினிகாய் தீவு அருகில் இருந்த இந்த படகில் 200 கிலோ ஹெராயின், 60 கிலோ ஹஷீஷைகொண்டு செல்வதாக படகில் இருந்த ஆறு பேரும் ஒப்புக்கொண்டனர், ஆனால் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் தப்பிச் சென்றுவிட்டனர்.

Read Also | 42 லட்சம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் மலக்குடலில் வைத்து கடத்தல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News