அயோத்தி ராமர் கோயில், வரும் ஜனவரி 22ஆம் தேதியன்று திறக்கப்பட இருக்கிறது. பிரம்மாண்ட அளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில் பல சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோத்தி ராமர் கோயில்:


அயோத்தி ராமர் கோயில், உத்தர பிரதேசத்தில் உள்ள சரயு நதிக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா, வரும் 22ஆம் தேதி நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கோயிலின் திறப்பு விழா, பல மாநிலங்களின் முக்கிய இடங்களில் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன. இந்த கோயில், பொது மக்களின் தரிசனத்திற்காகஜனவரி 24ஆம் தேதியி லிருந்து திறக்கப்பட உள்ளது. 


மேலும் படிக்க | ராம் லல்லாவுக்கு பிரசாதமாகும் 1250 கிலோ லட்டு! ஹைதராபாதில் இருந்து அயோத்திக்கு ஊர்வலம்


அயோத்தி ராமர் கோவிலின் முக்கியத்துவம்:


இந்த ராமர் கோயில், இந்துக்களின் மிக முக்கியமான புனித யாத்திரை தலமாக கருதப்படுகிறது. அயோத்தி, ராமர் பிறந்த இடமாகவும், புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.


கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது எப்போது?


ராமர் கோயிலுக்கு கடந்த 2020ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 


ராமர் கோயிலை நிர்வகிப்பது யார்?


அயோத்தி ராமர் கோயிலை ஸ்ரீ ராம ஜென்ம புமி தீர்த்த ஷேஷ்த்ரா அதிகாரிகள் நிர்வகிக்க உள்ளனர். இவர்கள், தங்களின் எக்ஸ் தள பதிவில் கோயில் குறித்த அப்டேட்டுகளை கடந்த ஆண்டு முதல் வெளியிட்டு வருகின்றனர். 


எத்தனை ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது? 


அய்யோத்தி ராமர் கோயில், கிட்டத்தட்ட 2.7 ஏக்கர் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. 


சுவாரஸ்ய தகவல்கள்:


>ராமர் கோயில், 380 அடி, 250 அகலம், 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 


>இந்த கோயில் மூன்று மாடி கட்டிடமாக கட்டப்பட்டுள்ளதாம். ஒரு மாடியின் தரைக்கும் அடுத்த மாடிக்கும் 20 அடி உயரம் என கோயிலின் நிர்வாக அதிகாரிகள் முன்னர் தெரிவித்துள்ளன.ர் 


>இந்த கோயில் 392 தூண்களும், 44 கதவுகளும் உள்ளது.  மேலும், 5 மண்டாங்கள், ஒரு ஹால் ஆகியவை உள்ளதாம்.


>இந்த கோயிலின் கிழக்கு திசையில் நுழையும் பக்தர்கள், 32 படிகள் ஏறி கோயிலுக்குள் நுழைய வேண்டுமாம். இதில், வயது முதிந்தவர்களுக்கும் மாற்று திறனாளிகளுக்கும் லிஃப்ட் மற்றும் ராம்ப் இருப்பதாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். 


>இந்த கோயிலில் ஒரு இடத்தில் கூட இரும்பு உபயோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 


உள்கட்டமைப்பு விவரங்கள்:


>கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கோவில்கள் உள்ளன - சூரியக் கடவுள், பகவதி தேவி, விநாயகர் மற்றும் சிவன் ஆகியோருக்காக அந்த கோயில்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அன்னபூர்ணா ஆலயம் வடபுறத்திலும், அனுமன் ஆலயம் தெற்கிலும் உள்ளது.


>ஈரப்பதத்தை தடுக்க, 21 அடி உயர க்ரானைட் இந்த கோயிலுக்காக உபயோகப்படுத்த பட்டுள்ளதாம். 


கோயில் கட்டுவதற்கு ஆன செலவு:


>ராமர் கோயிலை கட்டுவதற்கு 2022ஆம் ஆண்டில் ரூ.1,800 கோடி செலவாகும் என அனுமானிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாத கணக்கின் படி, இந்த கோயில் கட்டுவதற்கு பிப்ரவரி 5, 2020ஆம் ஆண்டு முதல் மார்ச் 31, 2023 வரை ரூ.900 கோடி செலவானதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஆன்மீகப் பயணம்: தமிழகம் வரும் பிரதமர் மோடி! வரவேற்க தயாராகும் தமிழக அரசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ