Interim Budget 2024 Asha and Anganwadi Workers: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த இடைக்கால பட்ஜெட்டில் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகளுக்கு பல முக்கிய மற்றும் பெரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனுடன், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் இடைக்கால பட்ஜெட் நல்ல செய்தியை கொண்டுவந்துள்ளது. அதன்படி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கம் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், அனைத்து ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் சுகாதார பாதுகாப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆஷா பணியாளர்களுக்கு என்ன பயன்?
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார். 'ஆஷா' பணியாளர்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் அனைத்து ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். நடுத்தர வர்க்கத்தின் தகுதியான பிரிவினருக்கு சொந்த வீடு கட்ட அரசு உதவும். 


மேலும் படிக்க | Budget 2024: ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதை அரசாங்கம் ஊக்குவிக்கும். நானோ யூரியாவை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்ட பிறகு, பல்வேறு பயிர்களில் நானோ டிஏபி பயன்பாடு அனைத்து வேளாண் காலநிலை மண்டலங்களிலும் விரிவுபடுத்தப்படும். இது தவிர, பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்க புதிய திட்டத்தை அரசு கொண்டு வரும் என்றார்.




மேலும் படிக்க | Budget vs Women: பெண்களுக்கு மத்திய அரசு செய்தவை என்ன? நிதியமைச்சரின் பட்ஜெட் உரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ