கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமிக்ரான், உலகம் முழுவதும் பீதியை கிளப்பியுள்ளது.  Omicron எதிர்பாராத எண்ணிக்கையிலான ஸ்பைக் புரதங்களைக் கொண்டுள்ளது என்றும் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றின் மிக மோசமான விளைவுகள் குறித்தும் உலக சுகாதார அமைப்பு (WHO)  எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், வரும்15 ஆம் தேதி தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று (Coroana Virus) பரவல் தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை அடுத்து மற்ற சேவைகளை போல விமான போக்குவரத்து சேவையும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன.


ALSO READ | Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!!


பின்னர் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்த வந்ததை அடுத்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, உள்நாட்டு விமான போக்குவரத்தும் கிட்டத்தட்ட இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சர்வதேச பயணியர் விமான போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில், வரும் 15 ஆம் தேதி முதல் சர்வதேச  விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு (Central Government) முன்னதாக அறிவித்து இருந்தது.


ALSO READ | இந்தியாவில் நுழைந்ததா ஒமைக்ரான்; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR