Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!!

புதிய கோவிட்-19 மாறுபாடான ஒமிக்ரான் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இப்போது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சுமார் 12 நாடுகளில் பரவியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 30, 2021, 08:52 AM IST
Omicron: WHO விடுத்துள்ள புதிய எச்சரிக்கை..!! title=

புதுடெல்லி: கோவிட்-19-ன் புதிய மாறுபாட்டான ஓமைக்ரான், உலகம் முழுவதும் பீதியை கிளப்பியுள்ளது.  ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் மிக மோசமான விளைவுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓமிக்ரானில் இருந்து தொற்று பரவும் அபாயம் மிக அதிகம் என்று WHO கூறியுள்ளது. Omicron எதிர்பாராத எண்ணிக்கையிலான ஸ்பைக் புரதங்களைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில் சில நோய்த்தொற்று வேகமாகப் பரவுவதால், அது ஒரு பெரிய பேரழிவாக மாறும்.

ஓமிக்ரானில் 26 முதல் 32 ம்யூடண்ட்கள் இருக்கலாம் என WHO எச்சரிக்கை

ஓமிக்ரானில் 26 முதல் 32 ம்யூடண்ட்கள் இருக்கக்கூடும் என்றும் இவற்றில் சில கவலைக்குரியவை என்றும் WHO கூறியது. உலக அளவில் ஓமிக்ரான் பரவும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதாக WHO கூறியது. Omicron மாறுபாடு உலகம் முழுவதும் வேகமாக பரவக்கூடியது என்று அது கூறியுள்ளது. எனவே, தடுப்பூசி போடுவதை அனைத்து நாடுகளும் துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனுடன், இந்த பேரிடர்களை எதிர்கொள்ள அரசு சுகாதார சேவைகள் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ALSO READ | இந்தியாவில் நுழைந்ததா ஒமைக்ரான்; சுகாதார அமைச்சகம் கூறுவது என்ன..!!

புதிய மாறுபாடு 12 நாடுகளில் பரவியுள்ளது

இந்த கோவிட்-19 ஒமிக்ரான் மாறுபாட்டின் முதல் தொற்று பாதிப்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில்,  இப்போது அது சுமார் 12 நாடுகளில் பரவியுள்ளது. எதிர்காலத்தில் கோவிட்-19 பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், இது பல காரணிகளைப் பொறுத்து கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும்  WHO மேலும் கூறியது. கோவிட் தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவுபடுத்துவது அவசியம் எனவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News