பெங்களூரு: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமைக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவரில் ஒருவரின் மாதிரி ஒமைக்ரான் பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICMR) அனுப்பப்பட்டுள்ளது. அந்த நபரின் மாதிரி ‘டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்டதாக உள்ளது’ என்று கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்தார். மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகளுடன் தான் இன்னும் தொடர்பில் இருப்பதாக, முடிவுகள் மாலைக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், தற்போது அதிகாரப்பூர்வமாக எதையும் கூற இயலாது என்று அமைச்சர் கூறினார்.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஓமைக்ரான் தொற்று உள்ளதாக கூறப்படுபவரின் அடையாளத்தை வெளியிட மறுத்த அமைச்சர், கொரோனா வைரஸ் தொற்றில் டெல்டா அல்லாத மாறுபாடு தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவரது கோவிட் அறிக்கை காட்டுகிறது என்றார். இது டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்டது என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. நாங்கள் ஐசிஎம்ஆர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறோம், அது என்ன என்பதை மாலைக்குள் மக்களுக்குத் தெரியப்படுத்துவோம் ” என்று அமைச்சர் கூறினார்.
ALSO READ | Omicron மாறுபாட்டின் அறிகுறிகள் என்ன?
செவ்வாய்கிழமை முக்கிய கூட்டம் நடத்தி, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன்மைச் செயலர் முதல் ஆரம்ப சுகாதார நிலைய அளவிலான மருத்துவர்கள் வரையிலான துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கே.சுதாகர் தெரிவித்தார். கோவிட்-19 தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களும் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
ALSO READ | Omicron: ஒமிக்ரான் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!
ஓமிக்ரான் மாறுபாடு குறித்த விரிவான அறிக்கையை கோரியுள்ளதாகவும் சுதாகர் கூறினார். “ஜெனோமிக் வரிசை சோதனைக்கு பிறகு ஓமிக்ரான் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் டிசம்பர் 1 அன்று கிடைக்கும். அதற்கேற்ப அனைத்து நடவடிக்கைகளையும் தொடங்குவோம்” என்று அவர் விளக்கினார்.
இதற்கிடையில், பி.எஸ்.பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு, கோவிட் புதிய திரிபு பரவுவதை தடுக்க மாநிலம் முழுவதும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவை ஒட்டிய தட்சிண கன்னடா, மடிகேரி, சாமராஜநகர் மற்றும் மைசூரு மாவட்டங்களில் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ALSO READ | Health Alert! புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR