INX மீடியா வழக்கு: திகாரில் ப.சிதம்பரத்துக்கு தனிசிறை வழங்க நீதிமன்றம் உத்தரவு
ப.சிதம்பரத்துக்கு தனிசிறை ஒதுக்க வேண்டும் என்றும், சிறையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவு.
புதுடெல்லி: கடந்த மாதம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் 15 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிந்துள்ள நிலையில், அவரை மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பு வழக்கறிஞர் மற்றும் ப.சிதம்பம் தரப்பு வழக்கறிஞர் ஆகியோரின் வாதங்களை கேட்ட நீதிபதி ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் வைக்க வேண்டும் எனக்கூறி உத்தரவு பிற்பித்தார்.
இதனையடுத்து நீதிமன்ற காவலில் தனது பாதுகாப்வை உறுதி செய்யுமாறும், தனி அறையும் வழங்குமாறு டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தனக்கு போதுமான பாதுகாப்பை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும், எனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனிசிறை வழங்குமாறும் கூறியுள்ளார்.
ப.சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவருக்கு தனிசிறை ஒதுக்க வேண்டும் என்றும், சிறையில் அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் மத்திய மந்திரி பி.சிதம்பரம் திகார் மத்திய சிறை எண் 7 இல் அடைக்கப்படுவார். இது பொருளாதார குற்றங்கள் மற்றும் பிற சிறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கானது.