IOCL M15 Petrol: பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) புதிய வகை பெட்ரோலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்ட புதிய வகை பெட்ரோல் மூலம் எரிபொருள் விலை குறையும். அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் 15 சதவீத மெத்தனால் கலந்த பெட்ரோல் 'எம்15' விற்பனை, முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எரிபொருள் விலை உயர்வில் இருந்து நிவாரணம்


மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி சனிக்கிழமையன்று 'எம் 15' பெட்ரோலை நிதி ஆயோக் உறுப்பினர் விகே. சரஸ்வத் மற்றும் ஐஓசி தலைவர் எஸ்.எம். வைத்யா முன்னிலையில் வெளியிட்டார். மெத்தனால் கலப்பது எரிபொருள் விலையேற்றத்திலிருந்து நிவாரணம் அளிக்கும் என்று டெலி கூறினார். இந்த விலை குறைப்பால், சாமானியர்களுக்கு பெரும் நிம்மதி கிடைக்கும்.


இந்தியன் ஆயில் நிறுவனத்தை தன்னிறைவாக மாற்றும் நடவடிக்கை


எம்15 பெட்ரோல் என்னும் மலிவு விலை பெட்ரோல் விற்பனை என்பது, எரிபொருள் விஷயத்தில் தன்னிறைவு பெறுவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும். இது இறக்குமதி சுமையையும் குறைக்கும் என்றார். இந்தியன் ஆயில் நிறுவனம் இந்தியாவை எரிசக்தியில் தன்னிறைவு அடையச் செய்ய இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் அமைச்சர் மேற்கோள் காட்டியுள்ளார்.


மேலும் படிக்க | பெட்ரோல் விலை உயர்வால் அதிகரிக்கும் பெட்ரோல் திருட்டு! வைரல் வீடியோ!


மெத்தனால் கலந்த பெட்ரோல் 


தின்சுகியாவில் மெத்தனால் எளிதில் கிடைப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சிக்கு இந்த பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இது அசாம் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 105 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பெட்ரோல், டீசல் விலை


ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பெட்ரோல் நிறுவனங்கள் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தியிருந்தன. ஏப்ரல் 6ம் தேதிக்குப் பிறகு, இதுவரை நிறுவனங்கள் எந்த வகையிலும் விலையை உயர்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பெட்ரோல் டீசல் விலை குறையுமா; நிதி அமைச்சர் கூறுவது என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR