இந்தியாவில் கடந்த ஆண்டைப் போலவே ஒரு முழுமையான லாக்டவுன் அல்லது கடுமையான கட்டுபாடுகள் கொண்ட பொது முடக்கம் தேவைப்படுகிறது என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில், COVID-19 தொற்று பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளதால், அதிக தொற்று பாதிப்பு உள்ள பகுதிகளில் கடுமையான லாக்டவுன் விதிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் குலேரியா வலியுறுத்தினார்.


கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல்,  இந்தியாவை நெருக்கடி நிலைக்கு ஆளாக்கி இருப்பதாகவும், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் பிற மாநிலங்களால் விதிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி லாக்டவுன் ஆகியவை பயனற்றவை என்பதையே நிரூபித்துள்ளன என்றும் டாக்டர் குலேரியா கூறினார். 


ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்


உலகில் வளர்ந்த நாடுகளே திணறும் போது,  இந்தியாவில் உள்ள சுகாரதார அமைப்பு இந்த வகையான சுமையை தாங்க வகையில் இல்லை என்பதால், லாக்டவுன் என்பது அவசியமாகிறது என கூறியுள்ளார்.


சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, டாக்டர் குலேரியா வைரஸ் வேகமாக பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டில் "மினி லாக் டவுன்" தேவை என்று கூறியிருந்தார். நாட்டில் COVID பரவல்  குறித்து மக்கள் அலட்சியமாக உள்ளனர் என அவர் கூறியிருந்தார்


கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 392,488 பபேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த தொற்று பாதிப்புகள் 1 கோடியே 90 லட்சம் என்ற அளவில் உள்ளது. . இதுவரை, இந்த வைரஸ் தொற்றார் 2,15,542 பேர் இறந்து விட்டனர்.


ALSO READ | கொரோனா நோயாளிகள் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் Prone Positioning


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR