PM Kisan: பிஎம் கிசான் யோஜனா தவணை 8000 ரூபாயா? இல்லை 9000 ரூபாயா? வைரல் ஊகங்கள்
Farmers scheme PM Kisan: 2024 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிப்பு குறித்து இணையத்தில் பல செய்திகள் வைரலாகி வருகின்றன
பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிப்பு: விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்குm பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கில் இதுவரை மொத்தம் 15 தவணைகளாக 2000 ரூபாய் பெற்றுள்ளனர். 2024 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிப்பு குறித்து இணையத்தில் பல செய்திகள் பரவி வருகின்றன.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற நிதி திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் ஆண்டுக்கு 6000 ரூபாய் என, மொத்தம் 3 சமமான தவணைகளில் உதவியை வழங்குகிறது. அதாவது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற அளவில் 6000 ரூபாய் வழஙகப்பட்டது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என இணையதளங்களில் வெளியாகும் ஊகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அரசு 1 தவணையை அதிகரிக்கலாம். தற்போது வரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இந்த தவணை விவசாயிகளுக்கு செலுத்தப்படுகிறது. ஆனால், இது உயர்த்தப்பட்டால், அதன் பிறகு விவசாயிகளுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை அதாவது காலாண்டு அடிப்படையில் நிதியுதவியைப் பெறலாம். இந்த நிதியாண்டின் கடைசி தவணையை இந்த மாதம் (2024 ஜனவரி) அல்லது பிப்ரவரியில் 16வது தவணையாகப் பெறுவார்கள்.
தற்போதைய பயனாளிகள் அரசாங்கத்திடம் இருந்து வருடத்திற்கு 6000 ரூபாய் பெறுகிறார்கள், ஆனால் அரசாங்கம் அதை வருடத்திற்கு 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தலாம் அல்லது ஒரு தவணையை மூவாயிரம் ரூபாயாக அதிகரித்து தவணையை அதிகரிக்காவிட்டால், 3 தவணைகளாக மொத்தம் ஆண்டுக்கு 9000 ரூபாய் பெறலாம். ஆனால் இதில் ஏதாவது ஒன்று நடைபெறும் என்றும், எது நடந்தாலும் அது விவசாயிகளுக்கு நல்லது தான் என்றும் ஊடகங்கள் கணிக்கின்றன.
பட்ஜெட் 2024
2024ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் தயாரிப்பு மும்முரமாக இருக்கும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம். விவசாயிகளுக்கு உதவித் தொகையை அரசு 6000 ரூபாயில் இருந்து 8000 ரூபாயாக உயர்த்தினால், சுமார் 22 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.
பி.எம்.கிசான் சம்மன் நிதியின் அதிகரிப்பு குறித்து அமைச்சர்களிடம் கேட்டபோது, பி.எம்.கிசான் திட்டத் தொகையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
லோக்சபா தேர்தல் 2024
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் காரணமாக பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்குப் பலனளிக்கும் தொகையை அரசாங்கம் அதிகரிக்கலாம் என சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையாகுமா என்பது தெரியாது. ஆனால், அண்மையில் நடைபெற்ற மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடைபெற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு பாஜக அரசு கூடுதல் நிதியுதவி அளித்துள்ளது.
மத்திய பிரதேச அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பிற மாநில அரசுகள் தேர்தல் காலத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கூடுதல் தொகையை வழங்கியுள்ளன. எனவே, வரவிருக்கும் தேர்தல்களில் விவசாயிகளின் ஆதரவைப் பெற, பிரதமர் கிசான் சம்மன் நிதி போன்ற மத்திய அளவிலான திட்டங்களுக்கு இந்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இது ஒரு செய்தி மட்டுமே மற்றும் இந்த செய்தியை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் கிடைக்கவில்லை. நீங்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் தற்போதைய பயனாளியாக இருந்தால், உங்களின் தற்போதைய திட்டம் மற்றும் நிலையைப் பற்றி அறிய PM கிசான் போர்ட்ட்லைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க | Year Ender 2023: இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி செய்த அதிரடி மாற்றங்கள் இவைதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ