PM Modi Caste Fact Check: மக்களவை தேர்தல் இன்னும் நாள்களில் அறிவிக்கப்பட உள்ளது, இன்னும் சில மாதங்களில் முடிவுகளும் தெரிந்துவிடும் எனலாம். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்து தற்போது INDIA என்ற நாடு தழுவிய பிரம்மாண்ட கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற கடுமையான போட்டியிடுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவை தேர்தலுக்கு முன் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நிதி யாத்திரை என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தை ஒடிசாவில் தற்போது ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுமக்கள் இடையே அவர் பேசியபோது பிரதமர் மோடி எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிட்டார். 


ராகுல் காந்தியின் கூற்று...


ராகுல் காந்தி பேசியபோது,"பிரதமர் மோடி பொதுப்பிரிவில் உள்ள சமூகத்தில் பிறந்தவர். அவர் தனது வாழ்நாள் முழுவதும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொள்ள மாட்டார், ஏனென்றால் அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறக்கவில்லை. அவர் பொதுப்பிரிவு சமூகத்தில் பிறந்தவர்" என்றார். 



இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில், "பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள தெலி சமூகத்தில் பிறந்தவர். அந்த சமூகம் கடந்த 2000ஆம் ஆண்டில்தான் OBC பிரிவுக்கு அந்த சமூகம் பாஜக அரசால் மாற்றப்பட்டது" எனவும் கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல்.. நாளை விவாதம்


பாஜக மறுப்பு


இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாட்டின் முதல் OBC பிரதமர் என பாஜகவினர் பிரதமர் மோடி சார்ந்த பிரச்சாரத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட கருத்தாகும். எனவே, இதுசார்ந்து பாஜக தரப்பில் உடனே பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவின் தலைவர் அமித் மால்வியா, ராகுல் காந்தியின் கூற்று முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.



அவர் x தளத்தில்,"பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்ற பிறகு தனது சமூகத்தை ஓபிசி என அறிவித்தார் என ராகுல் காந்தி கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். 


பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1999ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று அவரது சமூகம் OBC ஆக அறிவிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை அனைத்து நேரு-காந்தி குடும்பமும் ஓபிசிக்கு எதிரானது" என குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், அமித் மால்வியாவின் கருத்தை வழிமொழிந்திருக்கிறார்.


ஓபிசி பட்டியலுக்கு மாற்றம்


அரசு தரப்பில் முன்னர் வெளியிட்டப்பட்ட குறிப்பு ஒன்றில், தெலி சமூகத்தின் துணைப்பிரிவான மோத் காஞ்சி சமூகத்தைச் சேர்ந்தவர் பிரதமர் மோடி. இது சமூக (மற்றும்) கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் ஓபிசிக்கள் என குஜராத் அரசாங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டபோது, குஜராத்தில் நடைபெற்ற ஆய்வில் 105 சமூகம் OBC பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதில், இந்த மோத் காஞ்சி சமூகமும் இந்திய அரசால் சேர்க்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | PM Modi: இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் நேரு... மாநிலங்களவையில் பிரதமர் மோடி கடும் தாக்கு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ